சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

Date:

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர் கல்வி நிறுவனம், ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆயிஷா கலாபீட முன்றலில் அண்மையில் நடைபெற்றது.

‘அருள் மிகு குடும்பம் இன்பம் நிறைந்த இல்லம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி 07-11 ஆம் திகதி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இன்று அதனுடைய இறுதிநாளாகும்.

சமூகத்தை விழிப்புணர்வூட்டும் வகையில் 8 பிரதான தலைப்புகளை கண்காட்சி உள்ளடக்கியுள்ளது. ஆயிஷா கல்லூரியின் வரலாறு மற்றும் தாய்மை விருத்தி, இஸ்லாமிய குடும்பத்தின் நோக் கங்கள், திருமண வாழ்க்கை, பெற்றோரியம், குழந்தைகளின் வளர்ச்சியும் விருத்தியும், நவீன குடும்ப சவால்கள், இஸ்லாமிய வீடு, இஸ்லாமிய இல்லம் என்பவையே அவையாகும்.

குடும்பம் தொடர்பான பல்வேறு விடயங்களை காட்சிப்படுத்தப்படுத்தக்கூடிய இக்கண்காட்சி மிகவும் வரவேற்பு பெற்ற கண்காட்சியாக அமைந்துள்ளது.

இக்கண்காட்சியில் கலந்துகொண்ட கள்எளிய முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முன்னாள் அதிபருமான மௌலவியா திருமதி ஜலீலா ஷஃபீக் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள்…

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...