முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காலி முகத்திடலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (20) அவர் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இருப்பினும் அவரது கோரிக்கை கோட்டை நீதவானானால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.