நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

Date:

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 15 பொலிஸ் சிறப்புப் படைக் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை  பதிவாகியுள்ள 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறைப் பகுதியில்  நேற்று முன்தினம்  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மீன் வர்த்தகர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...