நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

Date:

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

-லத்தீப் பாரூக் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள்...

அடுத்த கட்டத்தை எட்டியது ‘மக்கா ஒப்பந்தம்’: சவூதியில் அமைகிறது நிரந்தர செயலகம்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் தங்கள்...

இஸ்தான்புல் நகரில் இன்று ‘மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ தொடர்பான முதல் கூட்டம்.

'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் நிறுவப்பட்ட 'மூலோபாய அரசியல் மற்றும்...