தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

Date:

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள் மகள் சாம் குறித்து எழுதிய உணர்ச்சி பூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட தியாகி அனஸ் ஷரீபின் மனைவி சின்னஞ்சிறு சாம் குறித்து இப்படி எழுதுகிறார்.

மகள் சாம் எப்போதுமே தந்தை அனஸுடனேயே இருப்பாள். செய்தித் தயாரிப்பு நடக்கும் சமயங்களிலும் கூட தன் தந்தையை அங்குமிங்கும் தேடுவாள்.

ரேடியோவில் தந்தையின் குரல் வரும் போது அப்போது தான் முதற் தடவையாக கேட்பது போன்று கேட்பாள்.

தனது தந்தையின் மரணத்தின் பின் அவரின் பணியை சாம் நிறைவேற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவரின் அடிச்சுவட்டை தொடரும் குரலாக சாம் மாறுவாள் ”

அனஸ் சரீப், காசாவில்  இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது தியாகம், பலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் சின்னமாக திகழ்கிறது.

அவரின் மரணம், காசாவில் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் தியாகத்தின் சின்னமாக உலகளவில் நினைவுகூரப்படுகிறது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...