எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

Date:

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி நிதியம் உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் தலா 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்றிரிவு 500 அடி பள்ளத்தில் கவிழந்து பாரிய விபத்தை ஏற்பட்டிருந்தது.

இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எல்ல விபத்தில் இறந்த அனைவரின் இறுதிச் சடங்குகளும் தங்காலை மாநகர சபை மற்றும் தங்காலை தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...

அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்...