கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது.

இதனால், நீர் விநியோக நிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து போதுமான அளவு நீரை சேமித்து வைக்குமாறும் அது அறிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளை பாதிக்கும்:

கொழும்பு 01 தொடக்கம் 15
பத்தரமுல்ல
பெலவத்த
ஹோகந்தர
கொஸ்வத்த
தலவத்துகொட
ராஜகிரிய
மிரிஹான
மதிவெல
நுகேகொடை
நாவல
கொலன்னாவை
ஐடிஎச்
கொட்டிகாவத்தை
அங்கொடை
வெல்லம்பிட்டி
ஒருகொடவத்தை
முல்லேரியாவ
மஹரகம
பொரலஸ்கமுவ
தெஹிவளை
இரத்மலானை
மொரட்டுவ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக தென் மாகாணம்

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay...