பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

Date:

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது மாணவர் முகமது சுஹைல், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 15  அவர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முஹம்மது சுஹைலின் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, விசாரணைகளில் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தனது கட்சிக்காரரை விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, முஹம்மது சுஹைலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக...

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான...

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...