டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது .

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,764 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

​கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை வாரத்திற்கு ஒருமுறை அடையாளங்கண்டு, டெங்கு நோயை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார் .

ஒருவருக்கு 02 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலைமை நீடிக்குமாயின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...