இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

Date:

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு  ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை அகற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என ஆலோசகர் சமூக வைத்தியர் சிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் இரத்த சிவப்பணு உற்பத்தியையும் சீர்குலைக்கிறது. விட்டமின் D அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் தலையிடுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என மதிப்பிட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கணித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...