ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக தெரிவும் நாளை 27ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் என். எம் அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கௌரவ அதிதியாகவும் முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெறவுள்ளது.
இதேவேளை பேராசிரியர் எம்.எச் ஜவஹருல்லா எம்.எல்.ஏ (தமிழ்நாடு – இந்தியா) எழுதிய செய்ன் ஃபாசில் மொழிபெயர்த்த ‘நபிதுமாங்கே சமாஜ சபந்ததா'(‘Nabithumange Samaaja Sabandatha’) புத்தக வெளியீடும் இடம்பெறவுள்ளது.
புத்தக விமர்சனத்தை களனிப் பல்கலைக்கழக சமூக அறிவியல் பீட வரலாற்றுத் துறைத் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் நிகழ்த்தவுள்ளார்.