அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok

Date:

சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தும் “STEM Feed” ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய in-app தளத்தின் மூலம் பயனர்களுக்கு கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை எளிதாக அணுக வழிவகுக்கிறது.

இந்த புதிய முயற்சி, டிஜிட்டல் யுகத்தில் கல்வியை பரவலாக்குவதற்கான ஒரு புதிய காலகட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

அத்துடன், இந்தக் கூட்டுமுயற்சியின் மூலம் இலங்கையின் இளைஞர்கள் தரமான கல்வி உள்ளடக்கங்களை எளிதில் அணுகி பயனடைய முடியும் என்பதுடன், STEM துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும் இந்த முயற்சி பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற அறிமுக விழாவில், பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் TikTok நிறுவனத்தின் பிரதிநிதிகள், அரசின் உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் STEM Feed கல்வியில் பங்களிப்புச் செய்யும் இலங்கை உள்ளடக்க உருவாக்குநர்கள் கலந்துகொண்டனர்.

TikTok இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக STEM Feed என்பது பயனர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த தரமான உள்ளடக்கங்களின் தெரிவுசெய்யப்பட்ட தொகுப்பை ஆராய உதவும் சிறப்பு in-app அம்சமாகும்.

இது ஆர்வத்தை தூண்டுவதற்கும், ஆய்வுச் சிந்தனையை வளர்ப்பதற்கும், குறிப்பாக இலங்கையின் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளம் தொழில்முறை வல்லுநர்களுக்கான டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், TikTok #StemTok என்ற சிறப்பு ஹேஷ்டேக்கையும், ஒரு தனி இணையப்பக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பங்காளிகள், படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் உருவாக்கிய உள்ளடக்கங்கள் இடம்பெறும், இது நாட்டில் உள்ளூர் மொழியில் STEM Feed தொடர்பான தகவல்களை எளிதாக அணுக உதவும்.

TikTok இன் STEM Feed அறிமுக விழாவில் பேசிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்த ஆரம்பத்தை முக்கியமான முன்னேற்றப் படியாக சுட்டிக்காட்டினார்.

“TikTok போன்ற சர்வதேச பங்காளிகள் இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது, TikTok அந்த இலக்குகளை வலுவாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற உதவுகிறது. அவர்களின் பங்கேற்பு இந்த திட்டத்திக்கு கூடுதல் வலிமை, புதிய யோசனைகள் மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுவருகிறது. மேலும், இந்த முயற்சி நாடு முழுவதும் அதிகமான மக்களைச் சென்றடைய உதவுகிறது.

அரசாங்க செயற்குழு முதலில் TikTok உடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்த போது, பொழுதுபோக்கை விட அதிகமான விடயங்களுக்கு இந்த தளத்தைப் பயன்படுத்த முடியுமா, கற்றல் மற்றும் கல்வியை ஊக்குவிப்பதற்கும் அதைப் பயன்படுத்த முடியுமா என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கான பதில் இன்று உங்கள் முன்னால் உள்ளது. STEM Feed ஆரம்பம் எங்கள் கூட்டாண்மையின் பிரதி பலனாகும்” என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் கல்விக்கான இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த TikTok நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான பொதுக் கொள்கை மற்றும் அரசு உறவுகளுக்கான தலைவர் ஃபெர்டௌஸ் மொட்டகின், “இலங்கையில் STEM Feed அறிமுகம் என்பது வெறுமனே கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை அணுகுவதை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிசெய்வது ஆகும்.

கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம், டிஜிட்டல் தளங்கள் தேசிய முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கு இலங்கை ஒரு பிராந்திய முன்மாதிரியாக திகழும் என என நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

TikTok நிறுவனம் STEM Feed அறிமுகத்துடன், பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பல்வேறு அம்சங்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ‘குடும்ப இணைப்பு’ (family pairing) மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கணக்குகளை கண்காணிக்க முடியும். இதில் திரை-நேர மேலாண்மை, உள்ளடக்க வடிகட்டிகள் (content filters) மற்றும் தேவையற்ற தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் அம்சங்கள் உள்ளன.

மேலும், நேர-ஒதுக்கீடு திட்டமிடல் (Time-Away Scheduling), இளையோர் வலையமைப்பு தெரிவுநிலை (Teen Network Visibility) மற்றும் முன்னெச்சரிக்கை அறிக்கை விழிப்பூட்டல்கள் (Proactive Reporting Alerts) போன்ற புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை ஊக்குவித்து, மனநலத்திற்கு ஆதரவளித்து, இணைய தொடர்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். இதன்மூலம் STEM Feed இளம் மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான கற்றல் தளமாக திகழும்.

TikTok இன் STEM Feed அறிமுகம் நிறுவனத்தின் உலகளாவிய சமூக வழிகாட்டுதல்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதில் நம்பகமான மற்றும் பொருத்தமான கல்வி உள்ளடக்கங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என அனைவரும் இந்த தளத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த முடியும் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

எனவே, STEM Feed அறிமுகத்துடன், டிஜிட்டல் தளங்கள் கல்வியை மாற்றியமைக்கும் உலகளாவிய முயற்சியில் இலங்கையும் இணைந்துள்ளது. அரசாங்கத்துடனான கூட்டுமுயற்சி மற்றும் தேசிய தொலைநோக்கம் இதற்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.

இந்த முன்னெடுப்பு வெறும் ஒரு செயலி அம்சம் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இளம் தலைமுறையினருக்கு அதிகாரமளித்து, அறிவின் எதிர்காலத்தில் இலங்கையின் இடத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக...

குறுகிய மணிநேரங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு...

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு: அமைச்சர் பிமல்

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ...

மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள புதிய 2000 ரூபா நாணயத்தாள்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபா புதிய நாணயத்தாள் மக்கள் புழக்கத்திற்கென உத்தரவாதமளிக்கப்பட்ட...