குறுகிய மணிநேரங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

Date:

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவைக்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும்.

எனவே, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

16 வயதில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பல ஆண்டுகளில் பின் உடல் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதனை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.

மேலும் ஒரு நாள் சேவை மற்றும் வழக்கமான சேவையின் கீழ் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 முதல் 5000 வரை கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதமாக என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...