தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு சுவிஸ் நாட்டிலுள்ள House of Religionsக்கு வருகை!

Date:

சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம்  ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில்இ கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சென்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளமன்ற உறுப்பினர்களும் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள House of Religionsக்கு விஜயம் செய்திருந்தனர்.

12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த தூதுக்குழுவினர் சுவிஸில் ஏற்பாடுசெய்திருந்த அரசியல் கருத்தரங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

அவ் வகையில் அவர்கள் பேர்னில் அமைந்துள்ள House of Religionsக்கு அழைக்கப்பட்டு அங்கு 8 சமயங்கள் ஒன்றிணைந்து செயற்படும் விதம் குறித்து விரிவாக அறிந்துகொண்டனர்.

சுவிட்சர்லாந்து  வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கேற்ப சுவிஸ் நாட்டில் தமிழர்களின் கடந்தகால அனுபவங்களையும், எதிர்கால எதிர்பார்ப்புக்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இணைப்பாளராக சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சார்பில்  House of Religions அமைப்பின் செயலாளர் சின்னத்துரை லாவண்யா செயல்பட்டார்.

இதேவேளை சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸட்சர்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது.

சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிட்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் கலந்துகொண்டு இக்கருத்தரங்கில் பங்குகொண்டு மெலதிக விளக்கங்களை விளக்கமளித்தனர்.

இலங்கையிலிருந்து சென்ற இந்த பாராளுமன்ற தூதுக்குழுவானது பல்வேறு முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையில் புதிய அரசு அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நீதி என்ற வாக்குறுதியுடன் ஆட்சியைக் கைப்பற்றினாலும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விற்கான நடவடிக்கையினை எடுத்ததாக நாம் உணவரவில்லை.

இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் பாகுபாடுகளையும், பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கின்றனர்.

சமய சுதந்திரத்தின் நடைமுறை போதுமான அளவில் செயல்படுவதாக தமிழர்கள் உணரவில்லை  போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பேர்ன் நகரிலுள்ள House of Religion இல்லமானது இலங்கையிலும் புத்தளத்தை மையமாகக் கொண்டு சர்வமத செய்றபாடுகளை முன்னெடுக்க அரச தரப்பிலும் தேவைப்பட்ட தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு முயற்சிகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

60 ஆண்டுகளில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா.

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க...

கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக...

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள்...