சீனாவின் இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விளாதிமீர் புதின், கிம் ஜாங் உன், மசூத் பெஜேஷ்கியன் உள்பட 26 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அமெரிக்கா தனது போட்டி நாடுகளாகக் கருதும் சீனா, ரஷியா மற்றும் வடகொரிய நாடுகளின் அதிபர்கள் மூவரும் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டது இதுவே முதல்முறை.
கடந்த 66 ஆண்டுகளில் சீன இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட முதல் வடகொரிய ஜனாதிபதி என்ற வரலாற்றை கிம் ஜாங் பெற்றுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பிரதமர், வியட்நாம் அதிபர், கம்போடியா மன்னர், மலேசியா பிரதமர், மியான்மர் ராணுவத் தலைவர், கியூபா ஜனாதிபதி உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.