PULSED அமைப்பின் மாணவர் கௌரவிப்பு விழாவில் கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு கௌரவம்

Date:

PULSED (Puttalam Union for Literacy, Social and Encouragement Development) அமைப்பின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று புத்தளம் மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு, PULSED அமைப்பின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்கள், இவ்வாறான அங்கீகாரமும் மரியாதையும் தமக்குப் பெரும் ஊக்கமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு, PULSED அமைப்புக்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக, PULSED அமைப்பின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக பரிசுகள் வழங்கி அவர்களது வெற்றியை உற்சாகப்படுத்தினர்.

Popular

More like this
Related

33 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ நிகழ்வு: அரஃபாத் நன்னாளில் புனித காபாவிற்கு நேர் உச்சியில் தோன்றும் சூரியன்!

இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில் ...

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...