நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்க நேரடி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட தகவல்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதன் மூலம், தேவையான சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட மேலும் சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் விரைவாக எடுப்பார்கள்
