Gen Zஇளைஞர்களின் மோசமான போராட்டங்கள்:முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி பலி!

Date:

நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காத்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தீ விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ்யலக்ஷ்மி சித்ரகர், கீர்த்திபூர் தீக்காய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து வெடித்த இந்தப் போராட்டங்கள், அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் மேலும் தீவிரம் அடைந்தன. பிரதமர் இல்லத்திற்கும் தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை அன்று உடனடியாகப் பதவியை இராஜினாமா செய்தார்.

பிரதமரின் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பௌடெல் (65) தலைநகரின் தெருக்களில் போராட்டக்காரர்களால் விரட்டி அடித்து தாக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, அமைச்சர்களை இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு நேபாள இராணுவம் கொண்டு சென்றது.

சமூக ஊடக நிறுவனங்கள் நேபாள அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுப் பதிவு செய்யாததால், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அரசு தடை விதித்தது. இது ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெகுண்டெழச் செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த போராட்டம் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றது.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சமூக ஊடகத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருந்தாலும், அரசின் மீதான அதிருப்தி காரணமாக போராட்டங்கள் தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு...

தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலால் கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கத்தார் கடும் கண்டனம்

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு...

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்களின் வலுக்கும் போராட்டம்: பாராளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ வைப்பு

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில்,...

நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்: அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

நேபாள அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு...