இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் நேற்றிரவு (07) நிகழ்ந்தது. உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் இந்த அற்புதமான காட்சியை கண்டு ரசித்தனர்.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும்.
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்த வேளையில் இந்த நிகழ்வு நிகழ்ந்தது.
இது சந்திரன் முழுமையின் உச்சத்தில் அடர் சிவப்பு மற்றும் செம் மஞ்சள் நிறத்தில் பிரகாசித்ததால், திகைப்பூட்டும் “இரத்த நிலவு” ஆகத் தோன்றியது.
இந்த சந்திர கிரகணம் ஆசியாவில் உள்ள பார்வையாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. இலங்கை, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை தெளிவான வான் பரப்பை நேற்றிரவு கொண்டிருந்தன.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் கிரகணத்தின் முழு போக்கையும் கண்டு அனுபவித்தனர்.
கண்டத்தின் சில பகுதிகளில் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும், ஐரோப்பாவில் உள்ள மக்களும் இந்த நிகழ்வின் வியத்தகு காட்சிகளை கண்டு களித்தனர்.
பல நாடுகளில் தென்பட்ட சந்திர கிரகணத்தின் புகைப்படங்கள்:
(சிட்னி – அவுஸ்திரேலியா)
(கெய்ரோ – எகிப்து)
(கென்யா)
(நெகேவ் – இஸ்ரேல்)
(டென்மார்க்)
(இந்தியா)