நாளை செப்டம்பர் 7ஆம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.
சந்திரகிரணத்தின்போது நிலவு இரத்தச் சிவப்பாகக் காட்சி தரும் என்றும் கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக, நிலவு இரத்தச் சிவப்பு நிறத்தில் காடசியளிக்கும்.
இது மிகவும் அரிய சந்திர கிரகணம் என்று விண்வெளி ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.
அதாவது, செப்டம்பா் 7, 8-ஆம் தேதி இரவில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. செப்டம்பா் 7 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.58 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி நிலவு ஒரு இரத்தச் சிவப்பாகக் காட்சியளிக்கும். தொடர்ந்து, திங்கட்கிழமை அதிகாலை 12.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது.
இதில், கிட்டத்தட்ட 85 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு, சூரியனின் ஒளி, பூமியைத் தாண்டி நிலவின் மீது பட்டு அது எதிரொலிப்பதே காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், இதேபோன்ற ஒரு சந்திர கிரகணத்தைக் காண வேண்டும் என்றால் அது 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.