பிரபல கல்வியாளரும் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான திருமதி ஜெஸிமா இஸ்மாயிலின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முன்னாள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குழு கௌரவிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பிறந்தநாள் விழா மட்டுமல்லாமல், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவர் ஏற்படுத்திய மறக்க முடியாத பாரம்பரியத்திற்கு உரிய மரியாதையாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.
முஸ்லிம் மகளிர் கல்லூரி சார்பாக பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி ரினீசா ருவைம் (PPA மற்றும் தற்போதைய ஆசிரியர்), திருமதி ஃபவாசா தாஹா (PPA இன் முன்னாள் துணைத் தலைவர்), திருமதி ரெஹானா மன்சூர்தீன் (PPA), திருமதி ஃபரீதா சமீன் இம்தியாஸ் (ஓய்வுபெற்ற துணை முதல்வர்) மற்றும் திருமதி ரிசான் நவாஸ் (தற்போதைய ஆசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெசிமா இஸ்மாயில் அவர்களின் முன்னோடியான தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட தலைமுறைகள் தோறும் மாணவியரும் கல்வியாளர்களும் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது.
விழாவின் சிறப்பான தருணமாக,ஜெசிமா இஸ்மாயில் அவர்கள் தனது பணியின்போது பள்ளி கலாச்சார நிகழ்வுகளுக்காக இணைந்து இயற்றிய சிறப்பு பாடல்களை அனைவரும் சேர்ந்து பாடினர். பழக்கப்பட்ட அந்த இசை அனைவருக்கும் இனிய நினைவுகளை எழுப்பி, நிகழ்ச்சிக்கு ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வை சேர்த்தது.
திருமதி இஸ்மாயிலின் பதவிக்காலம் ‘MLCயின் பொற்காலம்’ என்று அன்புடன் நினைவுகூரப்படுகிறது.
கல்விச் சிறப்பும், ஒழுக்கமும், முஸ்லிம் பெண்கள் முழுமையான வலிமையையும் பெற்றுக் கொள்ளும் சூழலையும் உருவாக்கிய காலமாக அது போற்றப்படுகிறது. ஜெசிமா இஸ்மாயில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் நெறிமுறையுடன் கூடிய தலைமுறைகளை உருவாக்கியது.