சூரியன் இன்று உச்சம் கொடுக்கும்

Date:

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று நண்பகல் 12.08 அளவில் அங்கல்ல, எல்பிட்டிய, அமுகொட, தவலம, தெனியாய, ஊருபொக்க, எம்பிலிபிட்டிய, சூரியவௌ, பெரலிஹெல மற்றும் கல்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை.

இன்றையதினம் (22) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை...

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...