அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

Date:

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்கள் மற்றும் பயணச் பயணச்சீட்டுகளைப் பெறாத பயணிகள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பயணிகள் பஸ்களில் GPS  சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...