இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

Date:

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சர்வதேச விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பர்ட்ஸ் – எக்ஸ் டிராகன்பிளை என பெயரிப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாசாவால் ஏவப்பட்ட SPX-33 ரொக்கெட் மிஷன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதல் நெனோ செயற்கைக்கோளானா “ராவணன்-1” செயற்கைக்கோளும், 2022 ஆம் ஆண்டு 5 சர்வதேச தரப்பினர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட “கிட்சூன்” செயற்கைக்கோளும் இதற்கு முன்னர் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டிருந்தன.

அதற்கிணங்க பர்ட்ஸ் – எக்ஸ் டிராகன்பிளை நெனோ செயற்கைக்கோள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...