வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

Date:

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் எம்.பி.க்கள் அதற்கான விலையில் 25% பணத்தை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

‘வியத்புர’ வீட்டுத் திட்டத்திலிருந்து வீடுகளை கொள்வனவு செய்ய எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (Urban Development Authority – UDA) செயற்படுத்தப்படும் வியத்புர வீட்டுத் திட்டம் (Viyathpura)  ஒரு சமூக நலத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், வீட்டு உரிமையை மேம்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.

ஆயினும் குறித்த வீட்டுத் திட்டத்தில் எம்.பிக்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்ய கடந்த அரசாங்க காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...