‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

Date:

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, 2025.10.08 அன்று பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் அழைப்பைத் தொடர்ந்து ஆஜராகி, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் கூறவில்லை எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

மேலும், இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...