ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

Date:

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய குறித்த முன்னாள் ஜனாதிபதிகள் தாம் அனுபவித்த வரப்பிரசாதங்களை மீள அரசாங்கத்திடம் கையளித்து வருகின்றனர்.

எனினும், அந்த ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்தநிலையில், சிலர் தாங்கள் பயன்படுத்திய சில பாதுகாப்பு வாகனங்களை கூட மீள ஒப்படைத்துள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் சில வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, பாதுகாப்பு வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வரப்பிரசாதங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுமாயின், அது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய தயாராகவுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் வராத பாதுகாப்பு சார் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் குறித்த தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக,...

பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய...

சிரிய அரசு – குர்திஷ் ஆயுதக் குழு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்.

சிரியாவில் செயல்பட்டு வரும் குர்திஷ் இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய...

‘தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்த சிங்கள மொழியிலான ஆய்வு நூல் வெளியீட்டு விழா.

பல நூற்றாண்டுகளாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல்,...