கடாபியிடம் பணத்தை பெற்று தேர்தல் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோஸியின் சிறைவாசம் எப்படியானது?

Date:

குற்றவியல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சா்கோஸி, தனது சிறைவாசத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

கடாபியிடம் பணத்தை பெற்று தேர்தல் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி  சார்க்கோஸி சிறைவாசம் அனுபவிக்கப்போகின்ற இடம் எப்படியானது?

  1. 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சட்டத்துக்கு முரணான வகையில் கடாபியின் நிதியைப்பெற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக சார்க்கோஸி Prison de la Sante சிறையில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க செல்கிறார்.
  2. 2007-2012 காலப்பகுயில் லிபியாவில் பதவி கவிழ்க்கப்பட்ட தலைவர் கடாபியிடமிருந்து நிதியை பெற்றாரென குற்றம் சுமத்தப்பட்டு 5ஆண்டு சிறையும் 1 இலட்சம் யூரோ அபராதமும் சார்க்ககோஸிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
  3. 15 சிறைக்கூடங்களை கொண்ட சிரேஷ்ட தலைவருக்கான சிறையில் சர்க்கோஸி தனிச்சிறையில் அடைக்கப்படுகிறார். இவரோடு கடத்தல்காரர்கள், பயங்கரவாத குற்றவாளிகளும் இச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கடும் பாதுகாப்புக்குட்பட்டவர்களுக்கான இச்சிறையில் அரசியல் தலைவர்களுக்கென்றே பிரத்தியேகமான ஏற்பாடுகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
  4. 11.09 அளவான நீள்சதுர அமைப்பைக்கொண்ட இச்சிறையானது இறுக்கமான மூடப்பட்ட ஒரு ஜன்னலையும் அளவு குறைவான ஒரு கட்டிலையும் ஒரு சிறிய அடுப்பையும் ஒரு கதிரை மற்றும் மேசையையும் தொலைக்காட்சி பெட்டியையும் குளிரை தடுப்பதற்கான heater, சலவை இயந்திரம் உள்ளிட்ட ஆரோக்கியமான வசதிகளையும் கொண்டதாக இருக்கிறது.
  5. 5 ஆண்டுகள் தனிச்சிறைவாசம் அனுபவிக்கும் சர்கோஸி தினமும் ஒரு மணித்தியாலம் கடும் பாதுகாப்பு போடப்பட்ட முற்ற வெளியில் ஓய்வுபெறுவதற்கும் கண்காணிப்புடன் கூடிய தொலைபேசி உரையாடலுக்கும் அனுமதிக்கப்படுவதோடு வாரத்தில் இரு தடவைகள் குடும்பத்தாரையும் சந்திக்க முடியும்.அத்துடன் சட்ட ஆலோசகரை சந்திக்கவும் அனுமதி உண்டு சிறைச்சாலை வளாகத்தில் உடற்பயிற்சிகளை செய்யவும் தாம் விரும்புகின்ற நூல்களை அங்குள்ள சிறிய நூலகத்தில் வைத்து பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...