பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

Date:

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை) ரூ.300,000 ஆகவும், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது,

அதே நேரத்தில் கடுமையான நோய்களுக்கான காப்புறுதி இப்போது ரூ.1.5 மில்லியனில் இருந்து ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காப்புறுதியில் இப்போது நிரந்தர ஊனத்திற்கு ரூ.200,000, நிரந்தரப் பகுதி ஊனத்திற்கு ரூ.150,000 மற்றும் தற்காலிக ஊனத்திற்கு ரூ.100,000 வரை அடங்கும்.

 

ஆண்டுதோறும் ரூ.240,000 க்கும் குறைவாக (ரூ.180,000 இலிருந்து) வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆயுள் காப்புறுதி சலுகைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்கள் இறந்த பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.75,000 பெறுவார்கள், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.225,000 கிடைக்கும்.

கால்-கை வலிப்பு (Epilepsy), சிறுநீரகச் சிதைவு நோய்க்குறி (Nephrotic syndrome), முடக்கு வாதம் (Rheumatoid arthritis), பெருங்குடல் அழற்சி (Systemic lupus erythematosis), குடல் அழற்சி (Ulcreative colitis), நாள்பட்ட நோய் (Crohn discase) மற்றும் இதய வாத நோய் (Rheumatic valvular heart disease) போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இப்போது வெளிநோயாளர் சலுகைகளுக்குத் தகுதியுடையவர்கள்.

 

மேலதிகக் காப்புறுதியில் முதுகுத்தண்டு வளைவு ரூ.75,000 மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் செவிப்புலன் கருவிகளுக்கு ரூ.75,000 ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...