பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

Date:

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் தனது விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் (14) பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு பிரதமர் விஜயம் செய்தார்.

 

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...