2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எச்.எம். அம்ஜடீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செப் 24 ஆம் திகதி டுபாயிலுள்ள MERCUR DUBAI DEIRA ஹோட்டலின் போல் ரூமில் நடைபெற்ற சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு நடைபெற்றுள்ளது.
இந்த வருடத்துக்கான ஹஜ் பயண முகவர் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டோர்:
தலைவர்: அல்ஹாஜ் எச்.எம். அம்ஜடீன் (AMJA Travels )
உப தலைவர்கள்: அல்ஹாஜ் MRM பாரூக் (Safeway Travels ), அல்ஹாஜ் SA அமானுல்லா (MPS Haj Travels )
செயலாளர்: அல்ஹாஜ் சப்ராஸ் ஸமூன் (Khairaz International Tours and Travels )
உப செயலாளர்: அல்ஹாஜ் அஸ்கர் அவுன் (Global Travels and Leisure (pvt) Ltd
பொருளாளர்: குஅப் ஜமால்தீன் (Travel Data Tours and Travels )
உப பொருளாளர்: அல்ஹாஜ் ஷியாம் சிராஜுதீன் (Khakiya Travels and Tours )
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
அல்ஹாஜ் HM ஸமீம் (Safa Travels and Tours )
அல்ஹாஜ் SMM நுஹ்மான் (Siddeeq Travels and Tours )
அல்ஹாஜ் MRM நைஸர்(Al Aqsa Global (pvt) Ltd
அல்ஹாஜ் மௌலவி ஜமால்தீன் அப்துல் லத்தீப் (Hafsa Travels and Tours )
கடந்த நிர்வாகக் குழுவின் செயலாளரும் பொருளாளரும் நடப்பு வருடத்திலும் குறித்த பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த நிர்வாகக் குழுவின் தலைவராக அல்ஹாஜ் ACBM கரீம் (Careem Lanka) கடமையாற்றினார்.