இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

Date:

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி கேள்வி எழுப்பிய போதே இந்தத் தகவல் தெரியவந்தது.

ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விடயங்களைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இதன்போது முன்வைத்தார்.

அதன்படி, ஆண்டுதோறும் 20 மில்லியன் தொன் தயிர் சட்டிகளும், 15 மில்லியன் தொன் லஞ்ச் ஷீட்களும், 20 மில்லியன் தொன் பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனில் சுமார் 70 சதவீதம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஆண்டுதோறும் அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதாகவும் இதனால் அவற்றைக் குறைப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும்” பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (20) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...