குற்றவியல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சா்கோஸி, தனது சிறைவாசத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
கடாபியிடம் பணத்தை பெற்று தேர்தல் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோஸி சிறைவாசம் அனுபவிக்கப்போகின்ற இடம் எப்படியானது?
- 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சட்டத்துக்கு முரணான வகையில் கடாபியின் நிதியைப்பெற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக சார்க்கோஸி Prison de la Sante சிறையில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க செல்கிறார்.
- 2007-2012 காலப்பகுயில் லிபியாவில் பதவி கவிழ்க்கப்பட்ட தலைவர் கடாபியிடமிருந்து நிதியை பெற்றாரென குற்றம் சுமத்தப்பட்டு 5ஆண்டு சிறையும் 1 இலட்சம் யூரோ அபராதமும் சார்க்ககோஸிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
- 15 சிறைக்கூடங்களை கொண்ட சிரேஷ்ட தலைவருக்கான சிறையில் சர்க்கோஸி தனிச்சிறையில் அடைக்கப்படுகிறார். இவரோடு கடத்தல்காரர்கள், பயங்கரவாத குற்றவாளிகளும் இச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கடும் பாதுகாப்புக்குட்பட்டவர்களுக்கான இச்சிறையில் அரசியல் தலைவர்களுக்கென்றே பிரத்தியேகமான ஏற்பாடுகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
- 11.09 அளவான நீள்சதுர அமைப்பைக்கொண்ட இச்சிறையானது இறுக்கமான மூடப்பட்ட ஒரு ஜன்னலையும் அளவு குறைவான ஒரு கட்டிலையும் ஒரு சிறிய அடுப்பையும் ஒரு கதிரை மற்றும் மேசையையும் தொலைக்காட்சி பெட்டியையும் குளிரை தடுப்பதற்கான heater, சலவை இயந்திரம் உள்ளிட்ட ஆரோக்கியமான வசதிகளையும் கொண்டதாக இருக்கிறது.
-