வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, அது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொலையில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடுத்த 02 முதல் 03 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...