தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

Date:

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  மூலப்பொருட்களைக் கொண்ட இராசயனக் கொள்கலன்கள் இரண்டு  நிலத்துக்குள் புதைக்கப்பட்ட விடயத்தில் சம்பத் மனம்பேரி  கைது செய்யப்பட்டு  90 நாட்கள்  தடுப்புக்காவலில்  வைத்து  விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் தான் வசீம் தாஜுதீனின் கொலை  சம்பந்தமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் குறித்த கொலை சம்பந்தமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக வசீம் தாஜுதீனின்  கொலை சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

கொலை சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்பின்னர்  அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.

கொலையுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது அதன் உண்மை தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

‘தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்த சிங்கள மொழியிலான ஆய்வு நூல் வெளியீட்டு விழா.

பல நூற்றாண்டுகளாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல்,...

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (20) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...