2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வவுச்சர் சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் QR குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இனை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர், 251- இற்கும் 500க்கும் இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர், பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
