புத்தளத்தில் நடைபெற்ற குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு!

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S. நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் இணைந்து, புத்தளம் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட குர்ஆன் மத்ரஸாக்களில் கடமையாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு 29 ஆம் திகதி புதன்கிழமை, புத்தளம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 200 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்டச் செயலாளர் திரு. வை. எம். சில்வா, புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் எம்.தமீம் ரஹ்மானி, மற்றும் புத்தளம் நகரக் கிளை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் எம்.பி.எம்.ஜிப்னாஸ் மிஸ்பாஹி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் N. நிலோபர் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தியதுடன், “விணைத்திரன் மிக்க குர்ஆன் மத்ரஸாவை நோக்கி” எனும் தலைப்பில் அஷ்ஷேக் ஏ. ஆர். ஏ. ஹபீழ் நளிமி அவர்களும், “குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களின் வகிபாகமும் உளவியல் அணுகுமுறையும்” எனும் தலைப்பில் School of Excellence ஆசிரியர் M.N.N.M.ரமீஸ் (B.A.) அவர்களும் தங்களது விரிவுரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட கள உத்தியோகத்தர் அஷ்ஷேக் இபாம் நளிமி மற்றும் எம். ஏ. சி. எம். ரியாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.

குர்ஆன் மத்ரஸா பகுதிக்கான திணைக்களப் பொறுப்பாளர் அஷ்ஷேக் ஏ. எம். ரிஸ்மி காஸிமி அவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து பயன்பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...