குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர்களான சுதத் மெண்டிஸ் மற்றும் எச்.டி.எம்.பிரேமதிலக்க ஆகியோர், கொழும்பு குற்றப் பிரிவினரால் எவ்வித சந்தேகமும் இன்றி கைது செய்யப்பட்டதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
நீண்டகால பரிசீலனையின் பின்னர், மகிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.