போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது.
அவற்றின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக முறைப்பாடு செய்யும் வகையில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் 071-8598888 என்ற WhatsApp இலக்கம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.