இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

Date:

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அதன்படி, கணக்கு ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு (Srilanka CERT) தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு அளிக்கப்படுவதாக சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
ஒன்லைனில் கலந்துரையாடலுக்காக சூம் (Zoom) இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் ஏற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கணக்குகள் ஊடுருவப்படும் போது, குழுவிலுள்ள மற்றவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஒரு கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் விரைவில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...