சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

Date:

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரிய இன்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நாட்டில் இருந்து புறப்பட்டிருந்தார்.

இன்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்த பிரதமருக்கு
சீன வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கான இணை அமைச்சர் காவ் சுமின் வரவேற்றார்.

பயணத்தின் முதல் நாளான இன்று பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்டார்.

எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

பீஜிங்கில் நடைபெறவுள்ள மாநாடானது, “பகிரப்பட்ட ஓர் எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பிரதமர் ஹரினி அமரசூரியவின் விஜயத்தின் போது, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...