காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

Date:

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல் (2025.10.10) குனூதுன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

மஸ்ஜித்களின் கண்ணியத்துக்குரிய நிர்வாகிகள் மற்றும் இமாம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு குனூத்துன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்வது தொடர்பாக

அல்லாஹு தஆலாவின் அருளாலும், காஸா மக்களின் உறுதி, தியாகத்தினாலும், உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஆற்றிய துஆக்கள் மற்றும் பலரதும் முயற்சியின் விளைவாகவும் தற்போது காஸாவில் யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

இதுவரை காஸா மக்களின் துயர்நீங்க வேண்டும் எனும் நோக்கில் குனூத்துன் நாஸிலாவை ஓதிய அனைவருக்கும் அல்லாஹ் நிரப்பமான நற்கூலியினை வழங்குவானாக!

இன்று முதல் (10.10) குனூதுன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

அத்துடன், யுத்த நிறுத்த நிலை நீடித்து மக்களுக்கு நீதியும் அமைதியும் பாதுகாப்பும் நிலைநாட்டப்படுவதற்காக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பிரார்த்திக்குமாறும் தங்களால் முடியுமான நல்லுதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...