சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

Date:

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில்  கைப்பற்றியதைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் எல் பாஷர் நகரில் மனித உரிமை மீறல்கள் பெரிதும் ஏற்பட்டுள்ளதாக பல சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

சூடானில், சக்திவாய்ந்த இரு இராணுவ தலைமைகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு போர் நடந்து வருவது தெரிந்ததே.

சூடானின் அதிகாரப்பூர்வ இராணுவ தலைவரான ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல் பூர்ஹான் தலைமையில் எஸ்.ஏ.எப், எனும் சூடான் ஆயுத படைகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

டர்பூரில் இனப்படுகொலை செய்த ஜன்ஜாவித் போராளிக் குழுவைச் சேர்ந்த ஜெனரல் முகமத் ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனும் துணை இராணுவ விரைவு படைகள் செயல்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாக சர்வாதிகாரியாக இருந்த ஓமர் அல் பஷீரை, 2019ல் ஆட்சியில் இருந்து அகற்றியதில் இரு பிரிவினரும் இணைந்து முக்கிய பங்கு வகித்தமை தெரிந்ததே.

Popular

More like this
Related

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...

ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம் – மாலைத்தீவு ஜனாதிபதி உறுதி

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள்...