பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

Date:

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ‘பி அறிக்கை’ மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும் என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் ‘பி அறிக்கை’ ஒன்றைத் தாக்கல் செய்து எனது பட்டப்படிப்பு குறித்து விசாரிக்க அனுமதி பெற்றது. அதன் பிறகு மாதக்கணக்கில் இது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்று வரை நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இணையத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுகிறது. இப்போது நுகேகொட பேரணிக்குக் கடுமையாகப் பயந்துவிட்டார்கள். அதனால் பொய்களைப் பரப்புகிறார்கள். இந்த அவதூறுகள் மற்றும் பழிகள் அனைத்துக்கும் 21ஆம் திகதி பதில் கிடைக்கும்” என்றார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாமல் ராஜபக்ஷவின் சட்டப் பட்டச் சான்றிதழ் தொடர்பாக சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலளிப்பது அவரது பொறுப்பு என்றும் கூறியிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...