புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

Date:

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும் சிறந்த வரலாற்றாசிரியரான பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா, தொல்லியல் ஆலோசனைக் குழுவின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தசாப்தங்களைத் தாண்டிய கல்விச் சேவைக் காலத்தில், பேராதனைப் பல்கலைக்கழகம், புருனே தருஸ்ஸலாம் பல்கலைக்கழகம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முன்னணி சர்வதேச கல்வி நிறுவனங்களில் பணியாற்றியுள்ள பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா, வரலாற்று ஆய்வு, காப்பக ஆராய்ச்சி, கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான ஆய்வுகளில் சிறப்பு நிபுணத்துவத்தை கொண்டுள்ளார்.

இலங்கையில் அரிய மலாய், அரபு தமிழ் மற்றும் இஸ்லாமிய கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்பு மற்றும் ஆவணப்படுத்தல், தேசிய ஆவணங்களுக்கான விரிவான ஆலோசனைப் பணிகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய வரலாறு, புருனேயின் அரசியலமைப்பு மேம்பாடு மற்றும் இலங்கை மலாய் சமூகம் பற்றிய ஏராளமான வெளியீடுகள் அவரது முன்னோடி பங்களிப்புகளில் அடங்கும்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய காலத்தில், பாடத்திட்ட மேம்பாடு, கல்வி மாற்றங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் வரலாறு, பண்பாட்டு ஆய்வுகளின் முன்னேற்றத்திலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

மேலும், தொல்லியல் புல ஆய்வுகள் மற்றும் அகழாய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, இலங்கை மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சான்றுகளை வகைப்படுத்துதல், விளக்குதல் மற்றும் பாதுகாப்பதில் அவர் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் பென்னட் பிரான்சன் மற்றும் விமலா பெக்லி தலைமையிலான பென்சில்வேனியா பல்கலைக்கழக தொல்பொருள் குழுவுடன் பேராசிரியர் ஹுசைன்மியா இணைந்து பணியாற்றியுள்ளார்.  பொம்பரிப்பில் உள்ள கந்தரோடை மற்றும் மெகல்திக் புதைகுழிகளில் அகழ்வாராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை இன ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப் பேராசிரியராகவும் முன்னாள் ஃபுல்பிரைட் கல்வியாளராகவும் செயல்பட்டு வரும் பேராசிரியர் ஹுசைன்மியா, வரலாறு, பாரம்பரியம் மற்றும் அடையாளம் குறித்த தேசிய விவாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி வருகிறார்.

அவரின் நியமனம், தொல்லியல் ஆலோசனைக் குழுவின் ஆதாரபூர்வ முடிவெடுப்புத் திறன், தொல்லியல் மேலாண்மை, கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பல அடுக்கு கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பெரும் வலுசேர்க்கையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான...