லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம்

Date:

இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால், லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் கலந்துரையாடவும் ரில்வின் சில்வா லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி லண்டன் கிளை ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை போன்றவற்றிற்கு மூல காரணமாக ரில்வின் சில்வா செயற்பட்டார் எனக் கூறி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த போராட்டத்தையும் மீறி ரில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் இருந்தது.

Popular

More like this
Related

1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே...

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!

நடப்பு ஆண்டில் நேற்று (12) வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...