ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா என்பவர் வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமசேகரவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர ஒக். 22 ஆம் திகதி அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சூடு நடத்தியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
