2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

Date:

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகிறது. தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது வரவு-செலவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
சுமார் 4 மணித்தியாலத்துக்கும் மேலாக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில், அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பின் இரண்டாம் கட்டத்தை ஜனவரி மாதம் முதல் வழங்கவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து 750 ரூபாய் வரை உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் அடையும் என்றும் ஜனாதிபதி தமது வரவு செலவு உரையில் தெரிவித்தார்.
இந்த நிலையில் வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அதன்பின்னர், வரவு செலவு மீதான மூன்றாம் வாசிப்புக்குரிய குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், வரவு செலவு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...