2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

Date:

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது.

நேற்று (09) சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இவ் ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்  முனீர் முளப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர்  அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோருக்கிடையில் கைசாத்திடப்பட்டது.

2026 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.

நேற்று கைசாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கான அதிகாரப்பூர்வ ஹஜ் கோட்டா 3,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில், 2025 ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முடிப்பதற்கு சவுதி அதிகாரிகள் செய்த சேவைகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நன்றியை பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துக்கொண்டதுடன் ,2026 இல் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இணைந்து வினைத்திறனான ஹஜ் சேவையை உருவாக்க இலங்கை தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் ஹஜ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், குறிப்பாக ஹஜ் சட்டம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கினார். இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லர், குழுவின் பங்கு மற்றும் எதிர்வரும் ஹஜ் யாத்திரைகளுக்காக செயல்படுத்தப்படும் செயல்முறைகள் குறித்தும் விளக்கினார்.

இதேவேளை, பிரதியமைச்சர் முனீர் முளப்பர் சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தௌபீக் பௌஸான் அல் ரபியாவை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஹஜ் சேவை வழங்குனர்களுடன் கலந்துரையாயாடுவதற்கும் உத்தேசித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஜித்தவில் உள்ள பதில் தூதர் மஃபூசா லாபீர், வைத்தியர்; அசிஸ் முகமது ஷிஹான் மற்றும் கலாநிதி எம்.என்.எம். அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...