தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

Date:

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் ஊடாக, தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக மாலைதீவு ஆகியுள்ளது.

இது குறித்து மாலைதீவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்கவும் 18 வயதுக்குட்பட்டவா்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, 2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மாலைத்தீவில் புகையிலை பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ முடியாது. இத்தடை அனைத்து வகை புகையிலைக்கும் பொருந்தும். விற்பனையாளா்கள் வயதை உறுதிப்படுத்திய பிறகே விற்பனை செய்ய வேண்டும்.

இத்தடை, மாலைதீவுக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். எலக்ட்ரொனிக் சிகரெட் மற்றும் வேப்பிங் பொருள்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டுக்கும் முழு தடை உள்ளது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...